Tamilnadu

11வது நாளாக உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. உயராத வருமானம்.. அல்லல்படும் நடுத்தர மக்கள்..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் வரையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான விலை தினசரி புது புது உச்சத்தை அடைந்து வருகிறது. அதற்கு மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் தமிழகத்தில் 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 91.92 ரூபாய் என விற்பனை ஆன நிலையில் 28 காசுகள் அதிகரித்து இன்று 92.20 ரூபாய் என விற்பனை ஆகிறது.

Also Read: ’சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலை 40 ரூபாய் தான்’: மோடி அரசின் நடவடிக்கையை முட்டாள்தனம் என சொல்லும் சு.சாமி

அதேபோல, பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று 85.26 ரூபாய் விற்பனை ஆன ஒரு லிட்டர் டீசல் இன்று 32 காசுகள் அதிகரித்து 85.58 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 100 ரூ 25 காசாக உயர்ந்துள்ளது. இதே போல் பாலாகாட், ஷாதோல் உள்ளிட்ட இடங்களில் 100 ரூயாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர், ஹனுமான்கர் உள்ளிட்ட நகரங்களிலும் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை இந்த விலை உயர்வு தொடரும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் ரூ.20 லட்சம் கோடியை ஈட்டிய மத்திய பாஜக அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!