Tamilnadu
“எனது பேட்டி திரிக்கப்பட்டுள்ளது” : தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் !
“சிவகாசி பகுதியில் நடைபெற்று வரும் பட்டாசு விபத்துகளை தடுக்க, அப்பகுதி மக்களுக்கென மாற்றுத் தொழிற்சாலைகளை அரசு உருவாக்கி, வேலைவாய்ப்பினை உருவாக்கினால் இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம்” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூரில், செய்தியாளர்கள் என்னை சந்தித்த போது "சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக பலர் இறந்திருக்கிறார்களே?" என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.
அதற்கு நான், "சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அரசு, அம்மக்களுக்கென மாற்று தொழிற்சாலைகளை அந்த பகுதியிலே உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பினை உருவாக்கினால், காலப்போக்கில் இத்தகைய விபத்துகளை தடுக்கலாம். காலப்போக்கில் பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்படலாம்” என்று நான் தெரிவித்தேன்.
ஆனால், சில பத்திரிகையாளர்கள், எனது பேட்டியை திரித்தும் - மாற்றியும் வெளியிட்டிருப்பதால், சிவகாசி பகுதி மக்களிடையே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான விளக்கமே இது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!