தமிழ்நாடு

“பிப்.16 முதல் ‘FASTag’ இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்”: மோடி அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

பிப்ரவரி 15,16 முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

“பிப்.16 முதல் ‘FASTag’ இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்”: மோடி அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களிடம் அங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். அதனை தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

இது நாம் அனைவரும் அறிந்தது தான். சமயங்களில் வாகன நெருக்கடி காரணமாக சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அவசரமான சூழ்நிலைகளில் இப்படி காத்திருப்பது பலருக்கு அவஸ்தையான ஒன்று தான்.

ஆனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் 'FasTag' 'ஃபாஸ்டேக்' என்ற ஒரு தனி லைன் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் நிற்காமல் நேராகச் சென்று விடும். அப்படிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது தவறு. அவை ’ஃபாஸ்டேக்’ முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டி விட்டுச் செல்கின்றன.

“பிப்.16 முதல் ‘FASTag’ இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்”: மோடி அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

இப்படி அவை செல்வதன் மூலம் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே வாகன நெருக்கடியும் அங்கு ஏற்படாது. இந்த வசதியைத் தான், நாளை முதல் 15/02/2021 அனைத்து வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 பிப்ரவரி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ’ஃபாஸ்டேக்’ மின்னணு பரிவர்த்தனை கட்டாயமாக்கப்படும்.

ஃபாஸ்டேக் என்றால் என்ன?

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டுவது தான் FasTag. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மத்திய அரசு சோதனை முறையில் சில சுங்கச்சாவடிகளில் ஒரு அல்லது இரண்டு சுங்க வரிசைகளில் ஃபாஸ்டேக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது.

முதலில் இது பரிசோதனை முறையில் சில டோல் பிளாசாக்களில் மட்டும் நடைமுறைக்கு வந்தது. அங்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வரும் மார்ச் 15 ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் இம்முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஏடிஎம் கார்டு மாதிரி ஃபாஸ்டேக் என்பதும் ஒரு மின்னணு அட்டை தான். இதில் வாகன ஓட்டிகள் முன்னதாகவே ஒரு தொகையை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் இந்த ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். சுங்கச்சாவடிகளை சம்பந்தப்பட்ட வாகனம் கடக்கும் போது, அந்த ஃபாஸ்டேக் அட்டையில் இருந்து தேவையான பணத்தை சுங்கச்சாவடி எடுத்துக் கொள்ளும்.

“பிப்.16 முதல் ‘FASTag’ இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்”: மோடி அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல் பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே ஃபாஸ்டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

டோல் பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன ஃபாஸ்டேக் மூலம் வாகன எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும். அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்படும்.

இதற்காக மேற்கண்ட வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்கி ஃபாஸ்டேக் பெற வேண்டும். இந்த முறை மூலம் வாகனங்களும் தாமதமில்லாமல் சுலபமாக சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும். அதோடு, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

“பிப்.16 முதல் ‘FASTag’ இல்லையென்றால் இரட்டிப்பு கட்டணம்”: மோடி அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!

ஃபாஸ்டேக் வாகனங்களுக்காக ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள 5 நுழைவு வாயில்களில் நான்கு தடங்கள் ஒதுக்கப்படுகிறது. மற்றொரு வாயிலை ஃபாஸ்டேக் வசதியில்லாத வாகனங்கள் பயன்படுத்தலாம். அங்கு சுங்கச்சாவடி ஊழியர் அமர்ந்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பார்.

ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் ஃபாஸ்டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் ஃபாஸ்டேக் மின்னணு அட்டையுடனேயே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 16 ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதும், ஃபாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பிப்ரவரி 15, 16 நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories