Tamilnadu

“எடப்பாடி பழனிச்சாமி ஒட்டுமொத்த தமிழகத்துக்கே துரோகம் செய்கிறார்” : தயாநிதிமாறன் சாடல்!

நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பொதுமக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தது மத்திய பா.ஜ.க அரசு எனவும், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கலைஞர் அவர்களால் மக்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்சிகளால் நிறைவேற்றாமல் மக்களை அ.தி.மு.க. அரசு புறக்கணித்துவிட்டது எனவும் திருத்துறைப்பூண்டியில் தயாநிதிமாறன் எம்.பி பேசியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் பிரச்சாரப் பயணத்தை திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்.பி தமது மூன்றாம் நாள் நிகழ்ச்சியை திருவாரூர் ஒன்றியம் புலிவலம் பகுதியில் துவக்கினார்.

அப்போது கர்மவீரர் காமராஜரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற உன்னத திட்டங்களை தந்தவர் கலைஞர் அவர்கள். அப்படித் தரப்பட்ட பல அரிய திட்டங்களை இந்த ஆட்சி, முறையாக பராமரிக்காமல், பாழ்படுத்துகிறது எனவும் ஆளும் அ.தி.மு.க அரசின் அவலங்களையும் எடுத்துக்கூறினார்.

பின்னர் மாவூர் அருகே கழக கொடியை ஏற்றி வைத்த தயாநிதி மாறன் எம்.பி மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் திருக்குவளை கிராமத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆப்பரக்குடியில் வசிக்கும் இசைக்கலைஞர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு மக்களுக்கு நீண்ட கால பிரச்சனையான சாதிச்சான்றிதழ் வழங்காமையை கழகத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்வதாகவும், விரைவில் அதற்கு நல்ல ஒரு தீர்வை அடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி வழி வகுக்கும் என்றார். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி கிராமத்தில் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி., தி.முக ஆட்சியில் விவசாயத்திற்கு செய்யப்பட்ட நல்ல பல திட்டங்களை சொல்லி தற்போது வேளாண் விரோத சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வரும் பா.ஜ.க அரசையும், அதனை தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க. அரசு கண்களை முடிக்கொண்டு ஆதரிப்பதையும் மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

பின்னர் திருத்துறைப் பூண்டி நகர பகுதியில் உள்ளகாமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து செலுத்தி, மொழிபோர் தியாகிகளின் குடும்பத் தாருக்கு மரியாதை செய்த தயாநிதிமாறன் எம்.பி. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசி, முதலமைச்சராக சசிகலாவின் தயவால் பதவிக்குவந்த பழனிச்சாமி தற்போது சசிகலாவுக்கு மட்டு மல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கே துரோகம் செய்வதாக குறிப்பிட்டார்.

கோட்டூர் வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற பிரமாண்ட விவசாய தொழி லாளர்கள்சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாநிதிமாறன் எம்.பி. அங்கு தலைவர் கலைஞர் நினைவு கல்வெட்டை திறந்து கழககொடியை ஏற்றி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஜெயலலிதாவை மம்மி என்றும் மோடியை டாடி என்றும் அழைக்கும் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரிக் கின்றனர். தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இந்தநிலைகள் மாறி விவசாயக்கடன், மாணவர்களின் கல்விக் கடன் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப் படும் என்று கூறினார்.

Also Read: 100 நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு - சாத்தியப்படுவது எப்படி? செயல்திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் விளக்கம்