Tamilnadu

தென்பெண்ணை ஆற்றில் தரமற்ற முறையில் கட்டிய தடுப்பணை உடைப்பு.. அதிமுக ஊழலுக்கு எடுத்துக்காட்டு!

விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை நேற்று மதியம் உடைப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் தரமற்ற முறையில் இந்த அணையை கட்டியதாகவும் மேலும் 25.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம் ஆவதற்குள் இந்த தடுப்பணை உடைந்தது இந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தி.மு.கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி நேற்று இரவே சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக தண்ணீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்றும் இந்த அணை உடைப்பு ஏற்பட்டது குறித்த காரணத்தை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் இந்த அணையை பொன்முடி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ஒரு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை உடைந்தது இந்த அதிமுக அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இந்த அணையை தரமற்ற முறையில் கட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இந்த துறைக்கு அமைச்சராக உள்ள முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இரண்டாயிரம் கோடிக்கு மேல் அவசர அவசரமாக டெண்டர் விடுவதற்கு காரணம் என்ன அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அதனால் கொள்ளை அடிப்பதற்காக அதிமுக அரசு அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் அந்த பணிகளும் தரமற்ற முறையில் நடக்க வாய்ப்புள்ளது. எனவே அந்தத் டெண்டர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது மாவட்ட செயலாளர்கள் புகழேந்தி கணேசன் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் மத்திய மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் லட்சுமணன் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன் வெங்கட்ராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்

Also Read: போடாத சாலைக்கு விளம்பரம் செய்த அதிமுக அரசு.. வடிவேலு காமெடியை போல் சாலையை காணவில்லை என மக்கள் புகார்!