தமிழ்நாடு

போடாத சாலைக்கு விளம்பரம் செய்த அதிமுக அரசு.. வடிவேலு காமெடியை போல் சாலையை காணவில்லை என மக்கள் புகார்!

வடிவேல் பட காமெடி கிணற்றை காணவில்லை என்பது போல மாமல்லபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போடாத சாலைக்கு விளம்பரம் செய்த அதிமுக அரசு.. வடிவேலு காமெடியை போல் சாலையை காணவில்லை என மக்கள் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபம் சாலை, ஒத்தவாடை சாலை அமைக்கப்படாமல் கையூட்டு பெற்றுக்கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் ஒத்தவாடை தெரு, கங்கைகொண்டான் தெருவில் உள்ள சாலைகள் அமைக்கப்படாமல் பேரூராட்சி நிர்வாகம் தனியார் நாளிதழ்களில் பொங்கல் தினத்தில் சிறப்பு மலராக விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதில் 1.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் விளம்பரம் வெளிவந்துள்ளது, அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இன்று மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர் கடந்த 2014இல் போடப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக மேடும் பல்லமாகவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் 2019 மற்றும் 2020 க்கான புதிய சாலை பணிகள் முடிக்கப்பட்டது என்று தனியார் நாளிதழ்களில் வெளியிட்டதை கண்ட அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தனர்.

இதுபோன்று மாமல்லபுரம் முழுவதும் பல்வேறு பணிகள் முடிக்கப்படாமல் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து வரும் திங்கட்கிழமை மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளான 15 வார்டுகளிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் அனைத்து கட்சியினர் ஒன்றினைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர். இதில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

போடாத சாலைக்கு விளம்பரம் செய்த அதிமுக அரசு.. வடிவேலு காமெடியை போல் சாலையை காணவில்லை என மக்கள் புகார்!

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை முறையிட்டபோது அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும் (கண்டுகொள்ளவில்லை) புதிய சாலை அமைக்கப்படாமல் முடித்ததாக கூறி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் மேலும் அப்பகுதியில் மின் விளக்குகள் (தெரு விளக்கு) எரிவதில்லை, தண்ணீர் சீராக கிடைப்பதில்லை, கால்வாய் வசதி சீரமைப்பது இல்லை உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்வைத்துள்ளனர். கால்வாய் சீரமைக்கப்படாத தால் கழிவுநீர் தேங்கி டெங்கு, மலேரியா, போன்ற பல்வேறு காய்ச்சல் நோய் உருவாகின்றது, இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக வயதான முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்ளாமல் செயல்படுவதாக சாடியுள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை முன் வைத்து கேட்டதற்கு அனைத்து பணிகளும் 2020இல் முடிக்கப்பட்டு உள்ளதாக சான்றிதழ் ஒன்று அளித்ததாகவும் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் சாலை போட்டதாக டெண்டர் யாருக்கு விடப்பட்டது இதில் யார் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் உள்ளிட்ட நகல்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக வரும் திங்கட்கிழமை அனைத்து கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.

இதுபோல முறைகேடாக பல்வேறு பணிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பேரூராட்சி நிர்வாகம் மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் மோகன் கூறுகையில், கங்கைகொண்டான் மண்டபம் மற்றும் ஒத்தவாடை சாலை இரண்டு சாலை 2020 இல் புதிதாக அமைக்கப்பட்டு முடிக்க பட்டதாக பேரூராட்சி நிர்வாகம் கூறிவருகிறது. ஆனால் தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதுவரையில் அந்த பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போடப்படாத சாலையை போடப்பட்டதாக கூறிவரும் பேரூராட்சி நிர்வாகம் அரசிடம் நிதி பெறப்பட்டு அரசு அதிகாரிகளிடம் கையூட்டு பெற்று கொண்டு முறைகேடாக செயல்பட்டு வருகின்றனர். இது போன்று மாமல்லபுரம் முழுக்க பல்வேறு பணிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயலாளர் வி. கிட்டு தலைமையில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துண்டறிக்கை வெளியிடப்பட்டன ஆனால் அரசு அதிகாரிகளும் செவி சாய்க்கவில்லை நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வடிவேல் காமெடி போல கிணற்றை காணோம், கிணற்றை காணோம் என்று புகார் செய்வது போல போடாத சாலையை போட்டதாக நிதி ஒதுக்கீடும் செய்து அப்பகுதியில் புதிய சாலை அமைக்கப் பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதுபோன்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் முறைகேடாக செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories