Tamilnadu
மதராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என்று பேரறிஞர் அண்ணா பெயர் மாற்றத்தை அறிவித்த தினம் இன்று!
மதராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் மாற்றத்தை அறிவித்த தினம் இன்று. விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி 75 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பலசலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம்., பேரறிஞர் அண்ணாத்துரை, பெருந்தலைவர் காமராசர், தோழர் ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சங்கரலிங்கனார் தொடர்ந்து உண்ணாவிரமிருந்து 13 அக்டோபர் 1956 ல் உயிர் துறந்தார்.
1967 ஜூலை 18ல் மதராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ஆகப் பெயர்மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 23.11.1967ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதையடுத்து 14.01.1969ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது சங்கரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!