Tamilnadu

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை.. குளறுபடி ஏற்படுத்த பாஜக அரசு சூழ்ச்சி?

எதிர்வரும் மே மாதம் தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான காலம் முடியவுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் தேதியை இறுதி செய்யும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதற்காக இந்த மாநிலங்களின் பண்டிகை, பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரைவு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளதாகக் தெரிகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுவை ஒரேகட்ட தேர்தலும், அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த முறை கொரொனா காரணமாக தமிழகத்திலும், கேரளாவிலும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தல் நடைபெற வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளறுபடிகள் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: மொபைல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை.. EVM-ஐ போல் இதிலும் குளறுபடி செய்ய திட்டமிடும் மோடி அரசு?