இந்தியா

மொபைல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை.. EVM-ஐ போல் இதிலும் குளறுபடி செய்ய திட்டமிடும் மோடி அரசு?

தொலைபேசியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

மொபைல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை.. EVM-ஐ போல் இதிலும் குளறுபடி செய்ய திட்டமிடும் மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்துள்ள தொலைபேசிக்கு வரும் ஓ.டி.பி எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதனை காண்பித்து தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது. அடுத்த வாரம் கூடும் தலைமை தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் இறுதி ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

மொபைல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை.. EVM-ஐ போல் இதிலும் குளறுபடி செய்ய திட்டமிடும் மோடி அரசு?

தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியவுடன் வரும் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில தேர்தல்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஒரு வாக்காளர் அட்டை தயாரிக்க ரூ.10 முதல் ரூ.15 வரை செலவிடப்படுகிறது. மின்னணு வாக்காளர் அட்டை திட்டம் வெற்றி பெற்றால் வாக்காளர் அட்டை தாயாரிப்பு செலவினை பெருமளவுக்கு குறைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

மொபைல் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை.. EVM-ஐ போல் இதிலும் குளறுபடி செய்ய திட்டமிடும் மோடி அரசு?

ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தின் துணையுடன் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜக அரசு பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இப்படி இருக்கையில், செல்ஃபோன் மூலம் வாக்களிக்கலாம் என புதிய திட்டத்தை தீட்டியுள்ளது வாக்காளர்களின் ரகசியத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

banner

Related Stories

Related Stories