Tamilnadu
“திருக்குறளை எழுதியது அவ்வையாரா?” : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு!
தமிழக அமைச்சரிகளில் சர்ச்சை பேச்சுக்குப் பெயர் பெற்றவர்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். திண்டுக்கல் சீனிவாசனிடம் இருந்து சர்ச்சையை பிரிக்க முடியாது என்ற அளவுக்கு இவரின் பேச்சுகள் இருக்கும்.
குறிப்பாக, ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய்’ என கூறி அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரமதர், மன்மோகன் சிங், நரசிம்மராவை பாரத பிரதமர் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டி.டிவி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என்று சொல்லி மிரள வைத்தார்.
மேலும் நீலகிரியில் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு, செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன். கடந்தவாரம் கூட மினி கிளினிக் திறப்பு விழாவில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “அரசு சார்பில் பொங்கலுக்காக ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசை பேசுவது போல தமிழக அரசை பேசி வருகின்றனர்” என்றார். அதாவது, காந்தியை சுட்ட கோட்சே என்பதற்கு பதிலாக, இயேசு நாதரை சுட்ட கோட்சே என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இன்று நடைபெற்றஅதிமுக ஆலோசனை கூட்டத்தில், நல்லார் ஒருவர் என தொடங்கும் குறளை அவ்வையார் ஒப்புவித்து எழுதியதாக கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.கவினர் பேச்சுக்கு இடையே குறுக்கிட்டு திருவள்ளுவர் என்றார்கள்.
அதற்கு, "திருக்குறளை வள்ளுவர் எழுதினாரா?" என மேடையிலேயே கேட்டுவிட்டு, “இல்லை அவ்வையாரும் சொல்லி இருக்கிறார். யாரு எழுதுனா என்ன நம்ம கருத்து சரியா இருக்கான்னுதான் பாக்கனும்” என்று கூறியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
”எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
CA, ISRO தேர்வு முதல் Bank கூட்டம் வரை... பொங்கலுக்கு பொங்கல் வைக்காமல் தேர்வை வைக்கும் ஒன்றிய பாஜக அரசு!