Tamilnadu
“விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறோம்.. முதல்வர் பதில் சொல்வாரா?” - பி.ஆர்.பாண்டியன் கேள்வி!
தமிழக முதலமைச்சர் தன்னுடைய சுய லாபத்திற்காக வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகவும், ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரணாகச் செயல்படுகிறார் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வேளாண் சட்டத்தினை திரும்பப் பெறும் வரை இந்தியாவில் போராட்டம் ஓயாது என தெரிவித்த அவர், இதனை ஆளுநரிடம் கோரிக்கையாக கேட்கிறோம், அந்த கோரிக்கை மனுவை ஆளுநரிடம் கொடுக்க இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், டெல்லியில் போராட்டம் நடைபெற்று 24 நாட்கள் கடந்து விட்டது. அரசு இதுகுறித்துப் பேச மறுக்கிறது. உச்சநீதிமன்றம் சொல்வதை கேட்க மறுக்கிறது. விவசாய குடும்பங்கள் வீதியில் நின்று போராடுவதாக வேதனை தெரிவித்த அவர், தமிழக முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளித்து மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் முதலமைச்சர் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார். பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். இதில் உள்ள பாதிப்புகளை நாங்கள் விளக்கி கூற இருக்கிறோம். இன்று மாலைக்குள் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!