Tamilnadu
மீண்டும் சாதி ஆதிக்க கொடுமை : தலித் என்பதால் கூட்டங்களில் புறக்கணிப்பதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் புகார்!
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளை அவமதிப்பதும், மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றன.
சமீபத்தில் திருவள்ளூரில் தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாளை சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் அவமதித்தைத் தொடர்ந்து கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான சரிதாவை, அலுவலகத்தில் அமரவிடாமல், ஆதிக்கசாதி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை அவர்களுக்கான இருக்கைகளில் அமரவிடாமல், ஆதிக்க சாதியினர் தரையில் அமரவைத்த சம்பவம் என தொடர்ந்து சாதிக் கொடுமைகள் முடிவுறாமல் அரங்கேறிவருகின்றன.
இந்நிலையில் தற்போது விருதுநகரில் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னை புறக்கணித்து ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமலே, பதிவேடுகளில் கையொப்பமிடச் சொல்லி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலர் மிரட்டுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் மனு அளித்துள்ளார்.
சிவகாசி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் இதுவரை எட்டு முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த எட்டு கூட்டத்திற்கும் இரண்டு பட்டியலின உறுப்பினர்களுக்கும், பட்டியலின ஊராட்சி மன்றத் துணைத் தலைவரான சுரேஷ்குமாருக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, முறையான அழைப்பு அனுப்பப்படாததோடு, கூட்டம் நடத்தும் பதிவேடுகளில் தன்னை கையெப்பம் இடுமாறு ஊராட்சி மன்றத் தலைவர் சந்தனமாரி மற்றும் சிலர் மிரட்டுவதாகவும் மற்ற உறுப்பினர்களின் கையெழுத்தை அவர்களாகவே போலியாக இட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ்குமார் மனு அளித்துள்ளார்.
Also Read
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!