Tamilnadu

“கண்டுகொள்ளாத மோடி அரசு - பெட்ரோல், டீசல் விலை 10-வது நாளாக அதிகரிப்பு” : சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

உலகம் முழுவதுமே கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் விலைவாசி உயர்வினை மோடி அரசு கட்டுப்படுத்தாதன் விளைவு, மக்கள் மோசமான நிதி நிலைமையை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பெட்ரோல் டீசல் விலையை வேறு நாள்தோறும் அதிகரிக்கின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன.

ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிலையில் மே மாதத்தில் சர்வதேச அளவில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கியதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.

அதன்பிறகு, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலையை பொறுத்தவரை 85.32 ரூபாயாக உள்ளது. நேற்று 85.12 ரூபாயாக இருந்ததில் இருந்து 20காசுகள் உயர்ந்துள்ளது.

அதேபோல், டீசல் விலை இன்று 77.86 ரூபாயாக உள்ளது. நேற்று 77.56ரூபாயாக இருந்ததில் இருந்து 20 காசுகள் டீசல் விலை உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் சில்லரை வகையில் விலை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ஒரு ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, நாளுக்கு நாள் சில்லரை வகையில் விலை அதிகரித்தாலும், மாதம் முழுவதும் பார்க்கும் பொழுது விலையை சமாளிக்க முடியவில்லை என சாமானிய மக்கள் கூறுகின்றனர்.

Also Read: “அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை”: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு!