இந்தியா

“அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை”: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு!

மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிடுள்ளது.

“அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை”: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26 - 27 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மாபெரும் தொழிலாளர் - விவசாயிகள் போராட்டத்தினையொட்டி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கி ஆயிரமாயிரமாய் விவசாயிகள் அணிதிரண்டார்கள்.

அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாதவாறு, விவசாயிகளை, உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று உத்தர பிரதேசம், அரியானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்ததும், விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்திருந்தது.

மோடி அரசின் தடைகள் அனைத்தையும் விவசாயிகளை எதுவும் செய்ய இயலாமல், கடைசியில் மத்திய பா.ஜ.க அரசு அவர்களைத் டெல்லிக்குள் விடுவதற்கும், போராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் கூடுவதற்கும் அனுமதித்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து டெல்லி எல்லையில் வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தனர்.

“அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை”: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு!

இந்நிலையில், “டெல்லியை நோக்கி விவசாயிகள் அணிவகுப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சுமார் 80 கிலோ மீட்டருக்கும் மேலாக அணிவகுப்பு நீண்டிருக்கிறது. மத்திய அரசு, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள ஆவேசத்தை உணர்ந்து, விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்க்க முன்வர வேண்டும். பெயரளவில் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை ஏமாற்றிவிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது” என்றும் விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

இதனையடுத்து, விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், அவர்கள் போராட்டம் நடத்த போலிஸ் அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளர். இதுதொடர்பாக அமித்ஷா கூறுகையில், “விவசாயிகள் அனைவரும் போலிஸார் மாற்றம் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள். நீங்கள் அங்கு போராட்டம் நடத்த போலிஸ் அனுமதி வழங்கப்படும்.

டிச.,3 ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் முதலில் மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்ற அடுத்த நாளே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய மோடி அரசு, மறுபுறம் போலிஸ் தடுப்புகளை அகற்றிவிட்டு, பேரணி சென்றதாக 10,000 விவசாயிகள் மீது போலிஸார் பெயர் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை”: டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு!

இந்நிலையில், அமித்ஷாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை. இந்தியா முழுவதுமுள்ள விவசாயகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்துகொண்டிருக்கிறார்கள்.

புதிய வேளாண் சட்டங்கள் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டிவிடும், உணவு உற்பத்திச் செலவினங்கள் உயர்ந்துவிடும், கறுப்புச் சந்தை கொடிகட்டிப் பறக்கும், மற்றும் உணவுப் பாதுகாப்பு அரித்து வீழ்த்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

இந்த இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த அளவிற்கு விவசாயிகள் இதற்கு முன் திரண்டது இல்லை. இப்போதாவது அரசாங்கம் உண்மை நிலையினை உணர்ந்து விவசாயிகள் மீதும் போராடும் சங்கங்கள் மீதும் அவதூறை அள்ளிவீசுவதை நிறுத்திக் கொண்டு பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories