Tamilnadu

கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு : அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு!

ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 1400 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் முத்துகொண்டாபுரத்தில் உள்ள தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், திருவாலங்காடு, காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, இராசபாளையம் காரணி நிஜாம்பட்டு, உள்ளிட்ட உள்ளிட்ட 30 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

கனகம்மாசத்திரத்தில் தான் அரசு மருத்து வமனை, காவல் நிலையம், காய்கறி மார்கெட் என அனைத்து கடைகளும் உள்ளதால் அப்பகுதிக்கு வரவேண்டிய 30 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: ஒருபுறம் புயல் பாதிப்பு; மறுபுறம் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: பேரிடரிலும் கல்லா கட்ட துடிக்கும் மோடி அரசு