Tamilnadu
நீலகிரி தோடர் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய திருமணம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
நீலகிரி மண்ணின் மைந்தர்களான தோடர் பழங்குடியினர் மக்கள் நடத்திய பாரம்பரிய திருமணத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வாழும் தோடர் பழங்குடியினர் மக்கள் தங்களுக்கு என தனி பாராம்பரியம், கலாச்சாரம், தனிமொழி என பல நூற்றாண்டு காலமாக நீலகிரி மலைத்தொடரில் இயற்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் முற்றிலும் இயற்கையோடு இயற்கையாக கலந்திருக்கும். அவர்களின் மொழியில் ஆடல் பாடல் என கலாச்சாரத்துடன் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு தோடர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தி.மு.க மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும் நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் அவர்களின் மகன் விவேக் - ஆர்த்தி ஆகியோரது மணவிழா கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு வனப்பகுதியில் இயற்கையோடு இயற்கையாக, கலாச்சாரம் மாறாமல் நடைபெற்றதை மகிழ்ச்சி அடைவதாகவும், மணமக்கள் எல்லா நலனும் பெற்று நல் வாழ்வு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து கடிதம் தொடர் பழங்குடியினர் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தோடர் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!