Tamilnadu
“மக்கள் விரட்டுறதுக்குள்ள போட்டோ எடுங்க” : தூய்மைப்பணி செய்ய வந்த பா.ஜ.கவினரை ஓடவிட்ட கிராம மக்கள்!
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியை அடுத்து உள்ளது அபிசேகப்பாக்கம். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதிக்கு, நேற்றைய தினம் துடைப்பம், குப்பை அள்ளும் கூடை சகிதம் 50 பேர் கொண்ட பா.ஜ.க கும்பல் சென்றுள்ளனர்.
அவர்களுடன் தூய்மைப் பணி செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வமும் வந்துள்ளார். இந்நிலையில், பா.ஜ.க கும்பலை பார்த்ததும் ஒன்று திரண்ட கிராம மக்கள் அவர்களை வழிமறித்து விசாரித்தனர். அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உங்கள் கிராமத்தை சுத்தம் செய்ய வந்தோம் எனக் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தலித் மக்களை பா.ஜ.க தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஏன் சமீபத்தில் கூட உத்தர பிரேதசத்தில் தலித் பெண் கொல்லப்பட்ட போது எங்கே போனீர்கள். உங்கள் சுத்தம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். முதலில் இந்த விளம்பர பேனர எடுத்துட்டுப் போங்க” என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சில பா.ஜ.க தொண்டர்கள் கேள்வி எழுப்பிய மக்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், விழாவிற்கு வெடிக்க வைத்திருந்த பட்டாசை கொளுத்திவிட்டனர்.
இதனால் மக்கள் மேலும் ஆத்திரமடைய, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க கொடிக் கம்பங்களை உடைத்து, பேனர்களை கிழித்து எரிந்தனர். மேலும், தொண்டர்களை மக்கள் தாக்க முயன்றதால் அச்சத்தில் பா.ஜ.க கும்பலில் இருந்த பலர் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் ஒரு பக்கம் நடந்ததால், மறுபக்கத்தில் புத்தாடையுடன் மினுனுப்பாக குப்பை அல்ல வந்த பொதுச்செயலாளர் ‘ஏம்பலம்’ செல்வம் மக்கள் வருவதற்குள் நான் சுத்தம் செய்வதுபோல போட்டோ எடுங்க என்று கூறி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் மக்கள் கூச்சலிட அங்கிருந்து இடத்தைக் காலி செய்தார் ‘ஏம்பலம்’ செல்வம்.
தான் போஸ் கொடுத்த புகைப்படத்துடன், அந்தப் பகுதியில் பா.ஜ.கவினர் சுத்தம் செய்ததாக பத்திரிகைக்கு செய்தி கொடுத்துள்ளார் ‘ஏம்பலம்’ செல்வம்.
இதனை பார்த்த சிலர் பா.ஜ.கவிற்கு தூய்மை பற்றி எல்லாம் அக்கறை கிடையாது; அவர்கள் அவ்வாறு சொல்லிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள் என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் பா.ஜ.க தொண்டர்களை பொதுமக்கள் விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!