Tamilnadu
“கஷ்டப்பட்டு விளைய வெச்ச தேயிலையை வாங்க மறுக்கும் தொழிற்சாலைகள்”: தவிப்பில் வாடும் கோத்தகிரி விவசாயிகள் !
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் ஒன்று தேயிலை தொழில் மற்றும் சுற்றுலாவை சார்ந்ததாகும். நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் அரை ஏக்கர் என 55 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் பசுந்தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பசுந்தேயிலை விலை உச்சத்தை எட்டியுள்ளது. தரம் வாய்ந்த முதல் தரம் பசுந்தேயிலை 36 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சாதாரண ரகம் 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூக்கல்தொரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள், சிறு குறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு தேயிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
இதனால், கடந்த 10 -நாட்களாக விவசாயிகளிடமிருந்து பசுந்தேயிலையை கொள்முதல் செய்யாமல், எவ்வித அறிவிப்பும் இன்றி தொழிற்சாலையை மூடி உள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு பசுந்தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தேயிலை விவசாய சங்க பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்காததால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்களின் கிராமங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
Also Read
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!