Tamilnadu
சென்னையில் 991, கோவையில் 498 பேருக்கு கொரோனா.. ஒரெ நாளில் 53 பேர் பலி.. தமிழகத்தின் இன்றைய #CoronaUpdates
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 5 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இருப்பினும் புதிதாக 78 ஆயிரத்து 190 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 ஆயிரத்து 752 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இதுகாறும், 5 லட்சத்து 8,511 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் 991, கோவையில் 498, செங்கல்பட்டில் 364, சேலத்தில் 297, கடலூரில் 296, திருவள்ளூரில் 294, திருவண்ணாமலையில் 222 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே மேலும் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆகவே சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,992 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 8,434 கொரோனா பலிகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தற்போது 46 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!