Corona Virus

கொரோனா பாதித்த உயிரணுக்களின் முதல் புகைப்படம் வெளியீடு!!!

சுவாசக் குழாய் உயிரணுக்களைப் பாதிக்கும் கொரோனா வைரசின் படங்கள்...

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவிட் -19 வைரசின் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. இன்று வரை கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தின் ஒரு ஆய்வகத்தில் சுவாசக் குழாய் உயிரணுக்களைப் பாதிக்கும் கொரோனா வைரசின் படங்கள் ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்டு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடபட்டுள்ளன.

கொரோனா பாதித்த உயிரணுக்களின் முதல் புகைப்படம் வெளியீடு!!!

இப்போது விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட இந்த படங்கள், நுரையீரலுக்குள் ஒரு குறிப்பிட்டட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாவல் கொரோனா வைரசின் துகள்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றன.

இந்த படங்கள் மனிதனின் சுவாச மேற்பரப்பில் இருக்கும் ஏராளமான கொரோனா துகள்கள் எவ்வாறு திசுக்கள் மூலமாகவும் மற்றும் பிற நபர்களுக்கு எவ்வாறு தொற்றுநோயை பரப்புகின்றன என்பதை ஆராய்ச்சியில் காட்டுகின்றன.

இந்த படங்களை பெறுவதற்காக, விஞ்ஞானிகள் கொரோனா வைரசை மனித நுரையீரலின் மூச்சுக்குழாயில் உள்ள எபிடெலியல் செல்களில் செலுத்தினர். பின்னர் அந்த செல்களை அதிக சக்தி வாய்ந்த ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி 96 மணி நேரம் ஆய்வு செய்யப்பட்டு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உடலில் ஒரு உறுப்பிலிருந்து மற்ற உறுப்புகளுக்கும் ஒரு பெரிய வைரஸ் சுமை எவ்வாறு பரவுகிறது என்பதற்கான ஆதாரமாக இந்த படங்கள் விளங்குகின்றன என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா வைரசின் இந்த சமீபத்திய படங்கள் வைரசை ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரப்புவதை கட்டுப்படுத்த முகக்கவசங்கள் பயன்படுத்துவதை மேலும் வலுப்படுத்துகின்றன.

banner

Related Stories

Related Stories