Tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது - இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ்! #Corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரத்து 277 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 988 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, கோவையில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 50,213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். அதில், 43 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,012 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் இந்தியா” : 2வது நாளாக 90 ஆயிரம் பேர் பாதிப்பு; 1,061 பேர் பலி!