Tamilnadu
“நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!
கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக பெண் யானை ஒன்று மயக்க நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 12 வயதுடைய பெண் யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந் தநிலையில், அந்த யானை நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனையடுத்து முதற்கட்டமாக யானை உடல் உபாதைகளாலே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே, யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு காரணங்களால் கடந்த 8 மாதங்களில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 17 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து யானைகள் உயிரிழப்பு குறித்து உரிய ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த யானைகளில் ஒரு யானை மட்டுமே துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்ற அனைத்து யானைகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் கிடைத்த தகவலில், நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட செரிமானக் கோளாறுகள், அதனால் ஏற்பட்ட தொற்றால் உடல் பாதை மற்றும் யானையின் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது வனப் பகுதியில் அந்நிய தாவரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட தாவரத்தால் யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் யானைகள் உயிரிழப்பு குறித்து அரசும், வனத்துறை அமைச்சரும் கவலைப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!