இந்தியா

“8 மாதங்களில் 17 யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர்”: கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்

கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் யானை ஒன்று இன்று சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

“8 மாதங்களில் 17  யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர்”: கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு பெண் யானை ஒன்று மயக்க நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 12 வயதுடைய பெண் யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தநிலையில், யானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து முதற்கட்டமாக யானை உடல் உபாதைகளாலே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானையின் உடலை உடற்கூறு ஆய்விற்குட்படுத்திய பின்னரே, யானையின் இறப்புக்கு என்ன? காரணம் என்பது தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

“8 மாதங்களில் 17  யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர்”: கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு காரணங்களால் கடந்த 8 மாதங்களில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 17 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும் யானைகள் உயிரிழந்த பிறகு முழுமையான அறிக்கை விடப்படும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதுவரை யானைகள் அடுத்ததடுத்து உயிரிழப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு அறிக்கையும் வெளியிட வில்லை.

சுற்றுசூழலை பாதுகாப்பத்தில் மிகப் முக்கிய பங்காற்றும் யானைகளின் மரணம் குறித்து இந்த அரசாங்கத்திற்கு கவலை இல்லையா? என வன விலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் இதுபற்றி எதுவும் பேசமால் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

“8 மாதங்களில் 17  யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர்”: கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்

யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துவதாக தம்பட்டம் அடிக்கும் அ.தி.மு.க அரசு, யானைகளை பாதுகாப்பதில் எந்த வித அக்கறையும் காட்டவில்லை எனவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினரை நியமித்து உரிய வகையில் விசாரணை நடத்தவேண்டும். யானைகள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories