இந்தியா

அப்போ யானை.. இப்போ பசுமாடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடியை வைத்த கொடூரம்!

பசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க. ஆளும் இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுமாட்டுக்கு உணவில் வெடியை வைத்து கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அப்போ யானை.. இப்போ பசுமாடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடியை வைத்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவின் பாலக்காடு மாவட்டாம் மண்ணார்காடு காட்டுப்பகுதியில், 15 வயதுடைய கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கொடுத்து கொன்ற சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவத்தை அறிந்த சமூகவலைதள வாசிகள் தங்களது உள்ளக்குமுறலையும், ஆத்திரத்தையும் சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். பிரபலங்கள் பலரும் யானைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக பதிவிட்டனர்

இந்த நிகழ்வு நடந்து ஒரே வாரத்திற்குள் இமாச்சல பிரதேசத்தில் வெடி மருந்து வைத்து மறைக்கப்பட்ட கோதுமை உருண்டையை சாப்பிட்டதால் கர்ப்பிணி பசுமாடு கடுமையான காயத்துக்கு ஆளாகியுள்ளது. இதனால், அதன் வாய், பற்கள் மற்றும் தாடை பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

அப்போ யானை.. இப்போ பசுமாடு.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு உணவில் வெடியை வைத்த கொடூரம்!

பிலாஸ்பூர் பகுதியில் உள்ள குர்தியால் சிங் என்பவருக்கு சொந்தமான பசுவுக்கு இந்த கோர நிகழ்வு நடந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் குர்தியால் சிங் புகார் அளித்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பக்கத்து வீட்டில் உள்ள நந்த் லால் என்பவர் இந்த கொடூரத்தை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நந்த் லால் மீது சட்டப்பிரிவி 429ன் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பசுவுக்கு வெடி மருந்து கொடுத்ததற்கான காரணத்தை கேட்டு போலிஸாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்னவெனில், குர்தியால் சிங்கின் பசு மாடு, நந்த் லாலின் வயலிலும் தோட்டத்திலும் மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தியதால் வஞ்சகத்தை மனதில் கொண்டு இவ்வாறு பசுமாட்டுக்கு கோதுமை உருண்டையில் நந்த் லால் வெடியை மறைத்து வைத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

தற்போது இந்த நிகழ்வும் சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டன பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசு மாட்டையே வெடி வைத்து கொலை செய்திருக்கும் சம்பவத்தை கண்டித்து #JusticeForNandhini என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories