Tamilnadu
“ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை ரவுடி பட்டியலில் சேர்ந்த காவல்துறை” : அ.தி.மு.க அரசு அராஜகம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்ட வேல்ராஜ் உள்ளிட்ட சிலர்களின் பெயர்களை காவல்துறையினர் ரவுடி பட்டியலில் சேர்த்து வெளியிட்டுள்ளனர்.
வேல்ராஜ் உள்ளிட்ட சிலர் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக ரவுடி பட்டியலில் அவர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக வேல்ராஜ் உள்ளிட்டவர்களின் பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சமூக செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபடுவோர் பெயர்களை ரவுடி பட்டியலில் சேர்த்த காவல்துறையை கண்டித்தும் அந்த பட்டியலில் இருந்து நீக்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்.
Also Read
-
“புயல் சேதம் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை கைவிடவேண்டும்! : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
-
எரிசக்தி திறனிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு!: ஒன்றிய அரசு வெளியிட்ட SEEI குறியீட்டில் தெரிவிப்பது என்ன?
-
“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!
-
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!