Tamilnadu
“வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது!?” - பொது மேலாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் பொது மேலாளராக சஞ்சய் வாக்லூ என்பவர் பணியாற்றி வருகிறார்.
வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்துப் பேச, நேற்று மாலை சி.எஃப்.எல்.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மேலாளர் அறைக்குச் சென்றுள்ளனர். தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழில் பேசத் தொடங்கியுள்ளனர்.
அப்போது குறுக்கிட்ட பொது மேலாளர் சஞ்சய் வாக்லூ, “இங்கு தமிழில் பேசக்கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுங்கள். தமிழில் யாராவது பேசினால் நான் எழுந்து வெளியே சென்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து தமிழில் பேசியதையடுத்து பொது மேலாளர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த தொழிற்சங்கத்தினர் இன்று தொழிற்சாலை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெடி மருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் மன்னிப்புக் கேட்கும் வரை அனைத்து தொழிற்சங்கங்கள், குன்னூரிலுள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!