Tamilnadu
“சாத்தான்குளம் கொலைவழக்கை முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கோருவோம்”- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்படு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எடப்பாடி அரசின் அராஜக போலிஸார் நடத்திய இந்த வெறியாட்டம் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சாத்தான்குளம் இரட்டைக் கொலை விவகாரத்தில் முறையான விசாரணை இல்லையென்றால் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குத் தொடர்வோம் என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
"சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதன் அடிப்படையில் சொன்னார்?
தவறு அரசின் பக்கம் என்றுதானே அ.தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?
காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக!
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை கேட்டு தி.மு.க வழக்குத் தாக்கல் செய்யும்!"
#JusticeforJayarajAndBennix #ArrestKillersOfJayarajAndBennix
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!