Tamilnadu
“கொரோனா பீதி.. குறைந்த ஊதியம்” : பணியில் சேராத ஒப்பந்த செவிலியர்கள் - செய்வதறியாது திணறும் சுகாதாரத்துறை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளதால், கூடுதலாக ஒப்பந்த முறையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேலான செவிலியர்களை தமிழக அரசு நியமித்தது.
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேராமலேயே உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு பணியில் சேர அழைப்பு விடுத்தும் சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கெனவே 18 ஆயிரத்துக்கும் மேலான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மற்ற செவிலியர்களைப் போன்றே பணிகள் வழங்கப்பட்டாலும் ஊதியம் என்னவோ வெறும் 14 ஆயிரம் ரூபாயாக மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரைப் பணயம் வைத்து இந்த கொரோனா காலத்தில் பணியில் ஈடுபடுகிறோம். இடைவேளையே இல்லாத பணியும் செய்து ஊதியமும் குறைவாகப் பெற்றுக்கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் எவ்வாறு சேர முடியும் என்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் மட்டுமே 150க்கும் மேலான செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளிலேயே பணியமர்த்தப்படுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வரும் வேளையில் கூடுதலாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணியில் சேராததால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!