Tamilnadu
“தமிழகத்தில் 30% அறிவில்லாத பெண்கள்” - ரஜினி சர்ச்சைப் பேச்சு!
நீண்ட காலமாக அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிவரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நிர்வாகிகளுடன் கூடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று நட்சத்திர விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினி “கட்சி வேறு; ஆட்சி வேறு. கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு வேறொரு தலைமையும் இருக்கவேண்டும். முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை” எனப் பேசியுள்ளார்.
மேலும், “மொத்தமுள்ள 50% பெண்களில் 20 சதவீதத்தினருக்குத்தான் வாக்களிப்பது குறித்து சுயமாகச் சிந்திக்கத் தெரியும். 30 சதவீத பெண்கள் ‘யாருக்கு வாக்களிக்கவேண்டும்’ எனும் அறிவில்லாமல் இருக்கின்றனர்.“ எனப் பேசியுள்ளார் ரஜினி.
தமிழக பெண்கள் குறித்த ரஜினியின் நிலைப்பாடு அங்கிருந்த பத்திரிகையாளர்களையும், பெண்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்து, மக்கள் விரோத கருத்துகளைப் பேசி வரும் ரஜினி, தனது அரசியல் பயணம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சைசை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!