Tamilnadu
வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் -'காவலன்' ஆப் மூலம் புகார் கூறிய பெண்... போலிஸின் ஆச்சர்ய செயல்!
சென்னை கொருக்குபேட்டை ஓஸ்வால் கார்டனில் குடியிருப்பவர் அனிதா சுரானா. இவரது வீட்டில் தனியாக இருக்கும்போது இரண்டு மர்ம நபர்கள் கூரியர் பாய் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனே தனது செல்போனில் உள்ள காவலன் செயலியில் அந்த இரண்டு மர்ம நபர்களை புகைப்படம் எடுத்து புகார் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி தகவல் பெற்ற ஆர்.கே நகர் போலிசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த 2 நபர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் சலீம் மற்றும் தாவூத் என தெரியவந்தது.
மேலும் இவர்கள் போலிஸாரை கண்டவுடன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற பின்பு காவல் நிலையம் அழைத்துச் சென்று இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!