Tamilnadu
“வேறொரு நடிகையுடன் சேர்ந்துகொண்டு என்னைக் கொடுமைப்படுத்துகிறார்” - சின்னத்திரை நடிகை பரபரப்பு புகார்!
தொலைகாட்சித் தொடர்களில் நடித்து அதன்மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. இவரும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வரும் காதலித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் (அக்.1) அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் ஈஸ்வரும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னைக் கொடுமைப் படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமி என்பவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது நகைகள் மற்றும் பணத்தை ஈஸ்வர் அபகரித்துக் கொண்டதாகவும், குழந்தையுடன் தான் தவித்து வருவதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அதில், ஈஸ்வர் திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களிலும், சூதாட்டத்திலும் அதிகமாக ஈடுபட்டதாகவும், தொடர்ந்து குடிபோதையில் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் தான் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!