Tamilnadu
பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? திருநாவுக்கரசர் எம்.பி கேள்வி!
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசியது தொடர்பாக நெட்டிசன்கள் முதற்கொண்டு அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பேட்டியளித்திருந்த திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், தமிழர் மரபு படி சீன அதிபருடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்திருந்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதாவது, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து வலம் வந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? இது போன்று வேட்டி, சட்டை அணிவதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?
வெளிநாட்டினர் வந்து செல்வதால் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே இருக்கும் கடற்கரை எப்போதுமே சுத்தமாகதான் இருக்கும். ஆனால் இப்படி குப்பைகளை எடுத்து விளம்பரம் தேடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை இப்படியெல்லாம் வேஷமிட்டு மக்களை திசைத் திருப்புவதன் முயற்சியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது. மேலும், மோடி வேட்டி சட்டை அணிந்துள்ளதால் வேலை வாய்ப்பும், தொழில் வளமும் பெருகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!