Tamilnadu
ஆவின் நெய், வெண்ணெய் விலையேற்றம் ? : மக்களை வதைக்க அடுத்த குண்டு போடத்தயாராகும் அ.தி.மு.க அரசு !
தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விலை உயர்வு மாதாந்திர வருவாய் பெறுவோர், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் நடுத்தர குடும்பத்தினர், ஏழை, எளியோர் தலையில் இடியை போடுவது போன்று எடப்பாடி அரசின் இந்த திடீர் விலையேற்றத்தினை எதிர்த்து பல தரப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகின்றனர்.
பால் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று அரசு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அறிவித்துள்ளது. மக்களின் கடும எதிர்ப்பையும் மீறி இன்று முதல் பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று அனைத்து ரக ஆவின் பால் பாக்கெட்டுகளும் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ரூ.22.50 க்கு விற்பனை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற பிரிமியம் பால் பாக்கெட் இன்று முதல் ரூ. 25.50க்கு விற்பனை செய்யப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.24.50)
ரூ.20.50 க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை நிற கிரீன்மேஜிக் பால் பாக்கெட் இன்று ரூ.23.50 க்கு விற்கப்பட்டது. (அட்டைதாரர்களுக்கு ரூ.22.50)ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்ட நீல நிற ‘நைஸ்’ பால் பாக்கெட் ரூ.21க்கு விலை உயர்ந்துள்ளது. (அட்டைதாரர்களுக்கு ரூ.20).
இதுவரை ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்ட டயட் பால் பாக்கெட் இப்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது (மாத சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.19.50)பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி மாதந்தோறும் லிட்டருக்கு கூடுதலாக ரூ.180 கட்ட வேண்டும்.
பால் விலை உயர்த்தப்பட்டதால் பாக்கெட் பால் வாங்குபவர்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பல இடங்களில் காண முடிந்தது. சில கடைகளில் ஆவின் பாலுக்கு பதிலாக தனியார் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பால் விலை உயர்வின் காரணமாக டீ கடைக்காரர்களும், டீ, காபி விலையை விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது இப்படி இருக்க, ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆவின் பாலகங்களில் ஒரு கிலோ நெய் ரூ.460க்கு விற்பனையாகி வருகிறது. வெண்ணெய் அரைகிலோ ரூ.220 க்கு விற்கப்படுகிறது.
இந்த விலையும் உயர்த்தப்படுவதோடு, பால் பவுடரின் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக ஆவின் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் தலையில் இடி மேல் இடியாக விலை உயர்வை சுமத்தும் எடப்பாடி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு அரசியல்கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!
-
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமா.. வி.சி.க. வேட்பாளர்கள் யார், யார்?
-
தேர்தல் 2026 : களமிறங்கும் 234 பேர்... வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்! - முரசொலி!
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!