Tamilnadu
இனி மேல் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் - வியப்பில் ஆழ்த்தும் ம.தி.மு.க அறிக்கை !
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாயை நிதி வழங்க வேண்டும் என ம.தி.மு.க அறிவித்துள்ளது.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தொடர்ந்து இயங்கி வருபவர் வைகோ. அரசியலில் பதவிகள் ஏதும் வகிக்காத காலங்களிலுமே, தொடர்ந்து மக்கள் நல போராட்டங்களில் பங்காற்றியவர் வைகோ. பேரணி, நடைபயணம், ஆர்ப்பாட்டம் என களத்தில் இறங்கியும், சட்டத்தின் மூலமும் இன்றளவும் போராடி வருபவர் வைகோ.
இது போன்ற போராட்டக்களங்களில் வைகோ பங்கெடுக்கும்போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைக் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் விரும்புவதுண்டு. வைகோவும் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக அவர்களுக்கு போஸ் கொடுத்துச் செல்வார். இது போன்ற செல்ஃபிக்கள் ஒரு அரசியல் தலைவருக்கு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உடைக்கிறது.
சமீபத்தில் ம.தி.மு.க. முக்கிய அறிவிப்புகளுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தான் இந்த செல்ஃபி குறித்த அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதில், இனி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி, புகைப்படம் எடுக்க விரும்புவோர், தலா 100 ரூபாய் நிதியாக கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்கக் கூடாது என்றும் சால்வைக்கான தொகையை கட்சி நிதிக்கு கொடுக்க சொல்லியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ம.தி.மு.கவின் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் வழங்க வேண்டுமா என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!