Tamilnadu
தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கு வணிகம் பாதிப்பு - விக்கிரமராஜா !
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '' சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், சென்னை மக்களுக்கு ஆறு மாதத்திற்கு தண்ணீர் கட்டணத்தை அரசு வசூலிக்ககூடாது. பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் கிடைத்த பின்பு தான் அதற்கான தடையை விதிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி கடைகளின் வாடைகைகளை குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு அரசு அதிகாரிகள் பல்வேறு வகையில் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்தும், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, வணிகர்களுக்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!