Tamilnadu
"ஒரே மொழி, ஒரே நாடு" என்னும் RSS கொள்கையை பா.ஜ.க புகுத்த நினைக்கிறது: கே.எஸ்.அழகிரி சாடல்!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக்கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "தமிழக அரசு தற்பொழுது உள்ள மொழிக்கொள்கையில் தெளிவற்றத் தன்மையில் உள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம் அதனை அடுத்து நீங்கள் விருப்பப்படுகிற ஒரு மொழியை படிக்கலாம் என்பது ஒருவகையில் மொழி திணிப்புதான்.
விருப்பம் உள்ள மொழியை தேர்வு செய்யலாம் என்பது வார்த்தை நன்றாக இருக்கும். ஆனால் கட்டாயமாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என நிர்பந்திப்பது திணிப்பைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே மாணவர்கள் இரண்டு மொழியை தான் படிக்கின்றனர். இன்னும் மேற்கொண்டு மூன்றாவதாக ஒரு மொழி என்றால் மேலும் சிரமத்தை தான் ஏற்படுத்தும் ஆகவே அதனை செய்யக்கூடாது.
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.கொள்கையாக உள்ளது. அந்தக் கொள்கையைத் தான் பா.ஜ.க புகுத்த நினைக்கிறது. அதுதான் அவர்கள் நோக்கம் கூட. தென் மாநிலங்களின் படுதோல்வியை சகித்துக் கொள்ளாமல் பா.ஜ.க, இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்துக்கொண்டு அதை தீவிரமாக அமல்படுத்த துடிக்கிறது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!