Sports
“எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?” - அமைச்சர் மா.சு. கண்டனம்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நேற்று (ஆக.18) எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் போல பொதுமக்களிடம் பேசினார். அப்போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டல் விடுத்தார்.
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் விரைந்து வரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல், ஓட்டுநரை மிரட்டியுள்ளது அவரது உண்மை முகத்தை காட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவசரகால 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டி உள்ளார் இதுபோன்ற அநாகரிகமான செயலை எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி வருமாறு :
எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் எங்க போனாலும் வருகிறது என்று கூறுகிறார். பிரதான சாலையில் எடப்பாடி பழனிசாமி போகிறார். தமிழ்நாடு முழுவதும் 1330 ஆம்புலன்ஸ் உயிர் காப்பதற்காக செல்கிறது. ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும். இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழிக்கு ஏற்ப, எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல? மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழனிசாமி அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசி வருகிறார்.
இது போன்று பேசுவதை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முன்னாள் முதலமைச்சர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நோயாளியாக செல்வார் என்று கூறுவது நல்லதல்ல. அவர் இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்." என்றார்.
Also Read
-
PM Internship திட்டத்தின் சுணக்கத்துக்கு காரணம் என்ன? : மக்களவையில் கனிமொழி MP கேள்வி!
-
இதற்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் : ஒன்றிய அரசின் பதில் மூலம் வெளிவந்த உண்மை!
-
மன்னிப்பு கேள் : எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
-
வேளாண்மை – உழவர் நலத் துறை : 169 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?