Sports
மாணவர்கள் கவனத்திற்கு... சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்! - விவரம் உள்ளே!
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இச்சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 21.03.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது, சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 06.04.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும்.
தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.
சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 08.04.2025 அன்று காலை 7.00 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விளையாட்டுத் தகுதிகள்: -
(01.01.2025) அன்று 17 வயது நிரம்பிய, 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சேர்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு சேர்க்கை சேர விருப்பும் மாணவ / மாணவியர் தகுதியுடையவர் ஆவர்.
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும், மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி ஆனவர்கள் ஆவார்கள்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!