Sports
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பது சந்தேகம் : அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் !
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு திரும்பி ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையை வெல்ல பும்ரா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய பும்ரா, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையையும் பும்ரா படைத்தார். மேலும் தற்போது முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் காயம் காரணமாக பும்ரா வெளியேறிய நிலையில், அவருக்கு பெரிய அளவில் காய ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரில் இருந்து அவரின் பெயர் இடம்பெறாத நிலையில், அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையிலும் அவர் இடம்பெறுவது சந்தேகம் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. இது ரசிகராகில் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!