Sports
பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப்க்கு ஒலிம்பிக் பதக்கம் உறுதி... அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் !
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட ஆப் 16 சுற்று போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் 46வது நொடியிலேயே இமானே கெலிஃப்பின் தாக்குதலால் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இரத்தம் வழிந்தது. இதனால் ஏஞ்சலா கரினி போட்டியை பாதியிலேயே நிறுத்தினார்.
மேலும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் பேட்டியளிக்க அவரின் குற்றச்சாட்டு இணையத்தில் வைரலானது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இமானே கெலிஃப் உடம்பில் ஆண்தன்மை அதிகமிருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக மருத்துவப்பரிசோதனை இமானே கெலிஃப்க்கு சாதகமாக வர, அவர் இந்த தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் பலரும் இமானே கெலிஃப்பை மோசமாக விமர்சித்தனர். எனினும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி இமானே கெலிஃப்புக்கு ஆதரவாக ஆதாரங்களுடன் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதான விமர்சனம் குறைந்தது.
அவருக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்த ஏஞ்சலா கரினியும் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மீண்டும் அவரை சந்தித்தால் இமானே கெலிஃப்பை கட்டி தழுவுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், இமானே கெலிஃப் ஒலிம்பிக் தொடரில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். நேற்று காலிறுதி போட்டியில் ஹங்கேரியின் ஹனாவை இமானே கெலிஃப் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
குத்துசண்டை போட்டியில் அரையிறுதியில்தோல்வியைத் தழுவினால் கூட வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்பதால் இமானே கெலிஃப்க்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு இமானே கெலிஃப் ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டுள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!