Sports
ஒலிம்பிக்கில் தொடங்கியது இந்தியாவின் பதக்க வேட்டை... வெண்கலம் வென்று அசத்திய மனு பாக்கர் !
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வரும் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் முதல் தங்க பதக்கத்தை சீனா வென்று அசத்தியது.
போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்கவில்லை.இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். 22 வயதான இந்திய வீராங்கனை மனு பபாக்கர் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிற்கான தகுதிச்சுற்றில் 580 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச்சுற்றில் கொடுக்கப்பட்ட 9 வாய்ப்புகளில் 4,5வது வாய்ப்புகளில் சற்று புள்ளிகளை தவறவிட்டாலும், மற்ற அனைத்து வாய்ப்புகளையும் கச்சிதமாக குறிவைத்து 10 புள்ளிகளை பெற்று அசத்தினார். முடிவில், 221.7 புள்ளிகளை பெற்ற அவர் 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். முதல் இரண்டு இடங்களை தென்கொரிய வீராங்கனைகள் தட்டிச்சென்றனர். இதையடுத்து, ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை அவருக்கு கிடைத்துள்ளது.
துப்பாக்கிச்சுடுதலில் ஒலிம்பிக்-ல் இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் இதுவரை யாரும் பதக்கம் வெல்லாத நிலையில், அந்த வரலாற்றை மனு பக்கர் மாற்றி அமைத்துள்ளார். மட்டுமின்றி, 20 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்-ல் இந்திய மகளிர் வீராங்கனை பதக்கம், 12ஆண்டுகள் கழித்து துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் என நீண்ட ஏக்கத்தையும் தணித்துள்ளார்.
தனது 18வயதில் டோக்கியோ ஒலிம்பிக்-ல் அறிமுகமான மனு பக்கர், இதே மகளிர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தனது துப்பாக்கியில் ஏற்பட்ட பிரச்சனையால் தகுதிச்சுற்றுடன் வெளியேறினார். டோக்கியோவில் விட்டதை பாரிசில் பிடிப்பதை இலக்காக வைத்து பயணித்த அவர், இன்று வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!