Sports
கோபா அமெரிக்கா : மெஸ்ஸி, ஆல்வரெஸ் அபாரம்... கனடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா !
ஃபிபா உலகக்கோப்பை, யூரோ கோப்பை தொடருக்கு பின்னர் அதிகம் பேரால் பார்க்கப்படும் கால்பந்து தொடராக கோபா அமெரிக்கா தொடர் திகழ்ந்து வருகிறது. பொதுவாக தென்னமெரிக்க நாடுகளுக்கான தொடராக இருந்தாலும் இதில் வேறு கண்டத்தை சேர்ந்த நாடுகளும் அழைப்பு ரீதியாக பங்கேற்று வருகின்றது.
இந்த முறை இந்த கால்பந்து தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் வட அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கோபா அமெரிக்கா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்த தொடரில் வட அமெரிக்காவை சேர்ந்த அணிகளும் பங்கேற்கவுள்ளது.
அந்த வகையில் தென்னமெரிக்காவை சேர்ந்த 10 நாடுகளும் வட அமெரிக்காவை சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்கிறது. உலககோப்பைகளை அதிகம் முறை வென்ற அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் இந்த தொடர் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.
இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி கனடா அணியை சந்தித்தது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அர்ஜென்டினாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஸ் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார்.
இதற்கு பதில் கோல் அடிக்க கனடா அணி முயற்சி செய்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி தனது அணிக்காக மற்றொரு கோலை அடித்து அசத்தினார். இதனால் 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது.
பின்னர் இறுதி வரை கனடா அணியால் கோல் அடிக்க முடியாத நிலையில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் கனடா அணியை வீழ்த்தி கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் உருகுவே அணி கொலம்பியா அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் வலிமைவாய்ந்த அணியும், 9 முறை கோபா அமெரிக்கா சாம்பியனுமான பிரேசில் அணியை காலிறுதியில் உருகுவே அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது .
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!