Sports
"தோனியை பார்த்தாலே ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள், இது உத்வேகமளிக்கிறது" - CSK வீரர் நெகிழ்ச்சி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், தோனி எப்போதெல்லாம் ஆடுகளத்திற்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர் என்று நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தோனியின் மீது மக்கள் அதீத அன்பை வெளிப்படுத்துகின்றனர். அவர் எப்போதெல்லாம் ஆடுகளத்திற்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். அதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.
தோனிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவைப் போல இதற்கு முன்னர் பார்த்ததில்லை. இதனை பார்க்கும்போதே தோனி என்ன சாதித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மக்களிடம் அவர் கொண்டிருக்கும் செல்வாக்கு உண்மையிலேயே எனக்கு உத்வேகம் அளிக்கிறது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
”பொதுவுடைமை இயக்கமும்; திராவிட இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த நடவடிக்கை என்ன? : அரசுக்கு கேள்வி எழுப்பிய கதிர் ஆனந்த் MP!
-
முத்ரா கடன்கள் முறையாக வழங்கப்படுகிறதா? : மக்களவையில் எம்.பி தரணிவேந்தன் கேள்வி!
-
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி எங்கே? : மீண்டும் ஒன்றிய அரசிடம் வலியுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி