Sports
ஹர்திக் பாண்டியா இதனை செய்தால் மீண்டும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் - பிரையன் லாரா கூறியது என்ன ?
கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.
அடுத்ததாக குஜராத் அணி பேட்டிங் செய்திகொண்டிருந்தபோது மைதானத்தில் ஒரு நாய் குறுக்கிட்டு ஓடியது. அப்போது ரசிகர்கள் ஹர்திக் என கோஷமெழுப்பினர். அப்போது இதனை வர்ணனையில் இருந்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஹார்திக் பாண்டியாவை "பார்த்து அகமதாபாத் ரசிகர்கள் கிண்டல் செய்வது போல் எந்த ஒரு இந்திய வீரருக்கும் நடந்ததை நான் இதுவரை பார்த்ததில்லை. இது ஒரு அரிய நிகழ்வு" என்று கூறினார்.
அப்போது மற்றொரு வர்ணனையாளரான இயன் பிஷப் அங்கிருந்த வர்ணனையாளரான மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிரைன் லாராவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாரா, "ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். அடுத்த முறை இதே மைதானத்தில் இந்திய அணியின் சீருடையில் அவர் விளையாடினால் ரசிகர்களின் மனதை வெல்ல முடியும்"என்று கூறியுள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!