Sports

சாதனை படைத்தவுடன் அஸ்வினுக்கு தெரியவந்த அதிர்ச்சி சம்பவம்: போட்டியிலிருந்து பாதியில் வெளியேற காரணம் என்ன?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.

இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்மூலம் கும்ப்ளேவுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஆனால், அந்த சாதனையைப் படைந்த சிறிது நேரத்தில் அஸ்வின் களத்தில் இருந்து வெளியேறினார்.

அவர் எதனால் வெளியேறினால் என்ற காரணம் புரியாமல் இருந்த நிலையில், அவரின் தாயாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் போட்டியில் இருந்து வெளியேறினார் என பி.சி.சி.ஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், "குடும்பத்தில் நிலவும் மருத்துவ அவசரநிலை காரணமாக அஷ்வின் நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுகிறார். இப்படியொரு சவாலான சூழலில் பி.சி.சி.ஐ-யும் இந்திய அணியும் அவருக்கு முழுமையாக துணை நிற்கும். இந்தச் சமயத்தில் பிசிசிஐ சார்பில் இதயபூர்வமான ஆதரவை அஷ்வினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்கள் மற்றும் அவர்களுக்குச் நெருக்கமான குடும்பத்தினரின் உடல்நிலைதான் ரொம்பவே முக்கியமானது. இந்தச் சவாலான சூழலில் அஷ்வின் மற்றும் அவர் குடும்பத்தாரின் தனிமனித சுதந்திரத்தை மதிக்க வேண்டுகிறோம். பி.சி.சி.ஐ மற்றும் இந்திய அணியினர் அஷ்வினுடன் தொடர்பிலேயே இருப்போம். அவருக்கு தேவைப்படும் அவசர உதவிகளையும் செய்து கொடுப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "பரிசை ஏற்றுக்கொண்டால் அது என் பாக்கியம்"- சர்ஃப்ராஸ்கான் தந்தைக்கு கார் பரிசாக வழங்கும் ஆனந்த் மஹிந்திரா