Sports
Home மைதானத்தை மாற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி ? IPL தொடரில் மேலும் ஒரு புதிய மைதானம்.. முழு விவரம் என்ன ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் அதற்கான ஏலம் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது வரை பஞ்சாபின் மொகாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தை தனது சொந்த மைதானமாக அறிவித்து விளையாடி வந்தது.
ஆனால் விரைவில் மொகாலியின் புறநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லான் பூர் மைதானத்தை தனது சொந்த மைதானமாக அறிவித்து விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தால் முல்லான் பூர் மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிந்த்ரா மைதானத்தை விட அதிக பார்வையாளர்கள் (37 ஆயிரம் ) அமரும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் 12 ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்காக அதிநவீன டிரஸ்ஸிங் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளும் பார்வையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?