Sports

அடுத்த ஆண்டும் IPL-ல் களம்காணும் தல தோனி: CSK தக்கவைத்த,விடுவித்த வீரர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே!

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் அதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை அணி தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டன் M.S.தோனி தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரே கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியல் !

M.S.தோனி,டெவன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, தீக்சனா, பதிரனா, ரஹானே, சிவம் துபே, முகேஷ் சவுத்ரி, தீபக் சஹர், சாண்ட்னர், நிஷாந்த் சிந்து, ஹாங்ரேகர், அஜய் மண்டல், சேக் ரஷீத், சிம்ரன்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி

CSK விடுவித்த வீரர்கள் பட்டியல் !

பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ்,அம்பதி ராயுடு, ஜெமிஷன், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, சிசாந்த மஹாலா, ஆகாஷ் சிங். இதன் மூலம் சென்னை அணி 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ரூ. 32.1 கோடி கையிருப்புடன் களம்காணவுள்ளது.

Also Read: கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி: மீண்டும் கலக்கிய இளம் வீரர் சாய் சுதர்சன்- அடுத்து இந்திய அணிதான்?