Sports
"ரோஹித் ஷர்மாவை கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பை ஏற்கவைத்தேன்" - கங்குலியின் கருத்தால் பரபரப்பு !
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து விரைவில் அனைத்து விதமாக இந்திய அணிக்கும் கேப்டனாக ரோஹித்சர்மா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலேயே இந்தியா அணி கடந்த 2 ஆண்டுகளாக ஆடி வருகிறது.
இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவை கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பை ஏற்கவைத்ததாக அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " முதலில் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவை விரும்பவில்லை. ஆர்வமில்லாத அவரை அப்பொறுப்பை ஏற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன். ரோஹித் ஷர்மாவை, சரி என்று சொல்லாவிட்டால், நானே அவரின் பெயரை அறிவிப்பேன் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு நிலைமை அப்போது சென்றது.
ரோஹித் அப்போது கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால், பணிச்சுமை ஒரு காரணியாக இருக்கலாம். ரோஹித் ஒரு சிறந்த கேப்டன் என்பதாலேயே அவரை கட்டாயப்படுத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். . என் பேச்சைக் கேட்டு அப்பொறுப்பை ரோஹித் ஏற்று, தற்போது அதில் சிறப்பாக செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!