Sports
முடிவுக்கு வருகிறதா மோதல் ? ஆசிய கோப்பை போட்டியை காண பாகிஸ்தான் செல்லும் BCCI தலைவர்.. பின்னணி என்ன ?
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், பிசிசிஐ-யின் முடிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி ஒப்புகொண்டதால் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியை காண பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று இருவரும் பாகிஸ்தான் செல்கின்றனர்.
மேலும், அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் இருதரப்பு தொடர் நடைபெறுவது குறித்தும், பாகிஸ்தானில் அடுத்து நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !