விளையாட்டு

" இப்படிப்பட்ட ஒரு வீரர் சாம்சனுக்கு மாற்றா ?" - மூத்த வீரரை விமர்சித்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

முழுவதும் உடல்தகுதி பெறாத கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டதற்கு முன்னாள் இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

" இப்படிப்பட்ட ஒரு வீரர் சாம்சனுக்கு மாற்றா ?" - மூத்த வீரரை விமர்சித்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.

அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படவில்லை. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

" இப்படிப்பட்ட ஒரு வீரர் சாம்சனுக்கு மாற்றா ?" - மூத்த வீரரை விமர்சித்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்!

இந்த நிலையில், முழுவதும் உடல்தகுதி பெறாத கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டதற்கு முன்னாள் இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "கே.எல்.ராகுல் இன்னும் முழு உடல்தகுதி பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்த்து ஏன் ? உடல்தகுதி தகுதி இல்லாத வீரரை நாங்கள் தேர்வு செய்ய மாட்டோம் என்பதுதான் அப்போது எங்கள் தேர்வு குழுவின் கொள்கையாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு சஞ்சு சாம்சனை மாற்றாக கூட்டிபோவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தபோது டெஸ்ட் தொடரில் போதிய உடல்தகுதி இல்லாத லக்ஷ்மணை அவர் கூறியதற்காக தேர்வு செய்தோம். ஆனால், போட்டியின்போது அவர் உரிய உடல்தகுதி பெறவில்லை. அவருக்கான மாற்று வீரரான ரோஹித் சர்மாவும் அப்போது காயமடைந்தார். எனவே அப்போது சாகாவுக்கு அவசர அவசரமாக வாய்ப்பளித்தோம். அதிலிருந்து நாங்கள் உடல் தகுதி இருந்தால் மட்டுமே வீரர்களை தேர்ந்தெடுத்தோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories